எனக்கு ஆண்பிள்ளை போல் வாழ ஆசை... - கடிதம் எழுதி வைத்துவிட்டு 14 வயது பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்

srilanka tamil news-tamillk


“பெண்ணாகப் பிறந்து வாழ்வது வருத்தமாக இருக்கிறது. “எனக்கு ஆண்பிள்ளை போல் வாழ வேண்டும்...” என தனது தாயாருக்கு கடிதம் எழுதியிருந்த வடக்கு படகம, கந்தானை பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி நேற்று தனது படுக்கையறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். 


கந்தானைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



தூக்கில் தொங்குவதற்கு முன் சிறுமி தனது தாயாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஒவ்வொரு கணமும் ஒரு பெண்ணாக வருந்துவதாக கூறப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் போது அவர் ஆண் குழந்தையாக வாழ விரும்புவதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதே நேரத்தில், சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொரிய தொலைக்காட்சி நாடகத்தில் குறிப்பிட்ட ஆண் நடிகர் ஒருவரை அவர் மிகவும் விரும்புவதாக அவரது கடிதத்தில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைபொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்