நாட்டின் மின்சார கட்டணங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தலை வழங்கியுள்ளது.
இதற்கு அமைய இன்று நல்ல இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின்சார கட்டணங்கள் 3 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மின்சார கட்டணங்களை திருத்தங்களை மேற்கொள்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணை குழுவினால் மின்சார சபையிடம் யோசனை ஒன்றை முன் வைத்திருந்த போதும்.
இதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆணைக் குழுவின் தலைவர் பதவி விலகியதையடுத்து. குறித்த மின்சார கட்டணத்தின் திருத்தங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலவியது.
இவ்வாறு நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து இவ்வாறான சிக்கல் தொடருமானால் தற்போது அமுலில் இருக்கும் கட்டணங்கள் எந்த ஒரு திருத்தங்களும் இல்லாமல் தொடர்வதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளதா மின்சார சபை அறிவித்திருந்தது.
எனினும் அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆனைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதை அடுத்து மின்சாரம் கட்டணங்கள் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



