இலங்கை மறுசீரமைக்கப்படாவிட்டால், 6000 வேலைகள் ஆபத்தில் உள்ளன

srilanka tamil news


 ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால் சுமார் 6000 ஊழியர்களின் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


தொடர்ச்சியாக நஷ்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை அரசாங்கம் தொடர்ந்தும் பராமரிக்க முடியாது எனவும், மக்களின் வரிப்பணத்தை தொடர்ந்தும் வீணடிப்பது நியாயமற்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நிதி நிபுணர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.




நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று (30) ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்