வவுனியாவில் தமிழர்களின் காணிகளை சிங்கள மக்களால் அபகரிப்பு என: சாள்ஸ் நிர்மலநாதன்

vavuniya tamil news


வவுனியாவில் வீரபுரம் பகுதியில் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 250 ஏக்கர் காணிகளை சிங்கள மக்களால் அபாகரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றபோது இது குறித்து குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.



இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் 1994 ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக அரசாங்கத்தால் 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் என்ற அடிப்படையில் குடியமர்த்தப்பட்டார்கள் ஆனால் தற்போது வரைக்கும் இந்த காளிகளை அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.



இதில் ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் 75 சதவீதமான காணிகளை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த சிங்கள மக்கள் அபாகரித்திருந்தார்கள்.



அதேபோன்று மதுராக நகரைச் சேர்ந்த எமது பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவுக்குள் சென்று குடியேற்றுவதற்கு வேண்டும் என்றால் அதற்கு அப்பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் மாத்திரம் அந்த பிரிவுக்குள் வர முடியும் என்று மாவட்ட செயலாக மட்டத்தில் அன்று எனக்கு பதில் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது 250 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரிக்கிறார்கள் எனவே வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகளை வழங்க வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்