வவுனியாவில் இன்று இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு...! Vavuniya News

 சித்திரை முழு நிலா தினமான இன்று வவுனியா (Vavuniya)  கோவில்குளம் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளாரின் சிலையடியில் அவரது நினைவுதினம் அனுஸ்டிக்கபட்டது.


வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது, 

Vavuniya tamil news - tamil lk news


அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 


அடிகளார் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.




இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சுமந்திரன், இந்து அன்பக சிறுவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்