போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என்று தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தபால் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் எடுக்கப்பட்ட தகவல்களை ஒப்பிட்டு பார்த்த போது இந்த வாகனங்கள் இல்லாதது குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது தபால் மா அதிபர் திரு.ருவன் சத்குமாரவிடம் கேட்டபோது, இந்த வாகனங்கள் 30-50 வருடங்களுக்கு இடைப்பட்டவையாகும்.
இந்த வாகனங்கள் பற்றிய தகவல்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு பதிவேடுகளில் உள்ளதாகவும், ஆனால் தபால் திணைக்களத்தின் பொருட்கள் பட்டியலில் இல்லை எனவும் தபால் மா அதிபர் கூறுகிறார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இதுவரை தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்த திரு.சத்குமார, வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை என்றால் அவற்றை தரவு அமைப்பிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, தபால் திணைக்களத்தின் 60 ஸ்ரீ 7256 இலக்கம் கொண்ட பஸ் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும், மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மா அதிபர் திரு.ருவன் சத்குமாரவிடம் நாம் வினவியபோது, முத்திரைப் பணியகத்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பேருந்தை அனுப்புவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



