கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!!

  

Tamil lk News

அம்பாறை, பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 




இன்று (10) அதிகாலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 




உயிரிழந்த இளைஞனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 




இதில் காயமடைந்த 28 வயதான இளைஞன் கல்முனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 




பக்கத்து வீட்டுக்காரர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்