7700 கோடி பெறுமதியான போதைப்பொருள் - நூதன முறையில் கடத்தல்

Drug trafficking-tamil news

இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ (5.3 தொன்) கொக்கைன் போதைப் பொருளை ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது பொலிஸார் கைப்பற்றியது.

அவற்றின் மதிப்பு சுமார் ரூ.7700 கோடி இதன்  தொகை (இந்திய நாணய மதிப்பின் படி ) என எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவிலிருந்து பயணிக்கும் ஒரு கப்பலை பொலிஸார் கண்காணித்து வந்தது. அப்போது சிசிலி ஜலசந்தி பகுதியில் இழுவை படகின் மூலம் எடுத்து செல்வதற்காக அந்த கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.

உடனே அந்த இழுவை படகை நிறுத்தி பரிசோதித்தபோது அதில் சில தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவில் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

Drug trafficking

இச்சம்பவம் தொடர்பாக துனிசியாவை சேர்ந்த இருவர், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியர் மற்றும் ஒரு பிரான்ஸ் நாட்டவர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்