வவுனியாவில் OL/AL மாணவர்களுக்கான "வெற்றிக்கான மென் திறன்கள்" சுய ஊக்குவிப்புப் பயிற்சி


(vavuniya news-tamillk ) வவுனியா மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தங்களின் கல்வி திறனை மேலும் அதிகரிப்பதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாக வெற்றிக்கான மென் திறன்கள் என்னும்  சிறந்த பயிற்சிநெறி ஒன்று வருகின்ற 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட பயிற்சி நெறியானது வவுனியாவில் அமைந்துள்ள IDM Nations Campus International ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

வளவாளர்

Dr.K.T.Prashantan


இலங்கையில் மிகவும் பிரபலமான வளவாளரான Dr.K.T.Prashantan தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த பயிற்சி நெறிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சாதனைக்கு வழிகாட்டல்

தற்போது உலகம் மிக வேகமான தொழில்நுட்பங்களுடனும் அதிக அறிவு திறன் கொண்டமையாக காணப்படும் நிலைகளில் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில்  மாணவர்களும் தங்களை தயார் படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

IDM Nations Campus International


மாணவர்கள் தங்களின் அறிவு திறன்களை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கு சரியான பயிற்சி நெறிகளைக் கொண்ட வழிகாட்டல் என்பது மிக அவசியமான காலகட்டத்தில் உள்ளமையால் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி நீங்களும் உலகில் ஒரு சாதனையாளராக மாறுவதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் நடைபெறவருக்கும் பயிற்சி நெறியாகும்.

பயிற்சி நெறியின் உள்ளடக்கம்

  1. சிறந்த பெறுபேறுகளுக்கான நேர்மறை உளப்பாங்கும் சரியான மனநிலையும்.
  2. ஆளுமை மேம்பாடு
  3. பயனுறுதியான சமூக ஊடகப் பயன்பாடு
  4. பயனுறுதியான முன்வைப்புத் திறன்கள்
  5. பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்கள்
  6. வாழ்நாள் கற்றல்

இவ்வாறு 6 உள்ளடக்கங்களைக் கொண்ட சிறந்த பயிற்சி நெறியாக இருப்பதால் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறந்த பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

குறித்த பயிற்சி நெறிகளில் நிறைவில் பெருமதியான சான்றிதழ்களும் வழங்கப்படும். என்பதனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி நெறியானது வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இம்மாதம் 30ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 12.30 மணி வரைக்கும் இடம்பெற்றுள்ளது.

பயிற்சி நெறிகளுக்கு முன் பதிவுகளுக்கு இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்

vavuniya news



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்