சீமெந்து விலையை முன்னூறு ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1900 ரூபா தொடக்கம் 2100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும், சீமெந்து மூடையின் அதிகபட்ச சில்லறை விலை 2600 ரூபா எனவும் சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் இவ்வாறு தெரிவித்தாலும் சந்தையில் தற்போதைய விற்பனை விலை 300 ரூபாவால் குறையாது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
Tags:
srilanka