ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நான்கு மாத தடுப்பூசி போடப்பட்ட மறுநாள் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக குழந்தையின் தந்தை குளியாப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேல் கோமுகோமுவில் வசித்து வந்த நிம்சதி சேனாநாயக்க என்ற குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதாகவும், மறுநாள் குழந்தை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தந்தையான ஹர்ஷன பிரதீப் சேனாநாயக்க இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மரண விசாரணை அதிகாரி விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் சடலத்தின் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக பேராதனை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸ் மா அதிபர் பண்டார விஜேசூரிய தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்


