மொரட்டுவைகெப் வண்டி பேருந்துடன் மோதியதில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மொரட்டுவை பகுதியில் கெப் வண்டி பேருந்துடன் மோதியதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம்
இன்று செவ்வாய்கிழமை (18) காலை எகொட உயன பிரதேசத்தில் பெலவத்தை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று டயரை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்



