இலங்கையில் வீதி விபத்துக்களால், மரணங்கள் ஏற்படும்போது, சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி, விஷ போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளது.
நேற்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மேற்கொண்டவாறு கூறுகையில் "சாரதிகளின் கவனயீனமே, பெரும்பாலான வீதி விபத்துக்களுக்கு காரணமாகும்“ என பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதன் போது தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்.
வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது மதுபானம் அல்லது போதைப்பொருளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக, வீதிவிதி தொடர்பான சட்டத்திற்கு அமைய 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதுடன், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடியும்.
மேலும் அபாராதத் தொகையை அதிகரிப்பதன் மூலமும் வீதி விபத்துக்களைக் குறைக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் .
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்


