யாழ்ப்பாணத்தில் உணவகங்களில் எரிவாயு விலை உயர்வை காரணம் காட்டி உணவு பண்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டு காணப்பட்டன.ர
தற்போது எரிவாயுவின் விலை சுமார் 1500 ரூபாவால் குறைந்துள்ள நிலையில், இன்னும் உணவு பண்டங்களின் விலைகள் குறையாமல் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பல உணவகங்கள் எரிவாய்வின் விலையை காரணம் காட்டி திடீர் திடீரென உணவு பண்டங்களின் விலைகள் அதிகரித்து வந்தன.
இந்த நிலையில் தற்போதைய உணவுகளின் விலைகள் மத்திய சைவ உணவு ஒரு பார்சல் 600 ரூபாய், அசைவ உணவாக பெற வேண்டும் என்றால் ஆக குறைந்தது ஆயிரம் ரூபாய் அதேபோன்று றோல் ஒன்றின் விலை 100 ரூபாய் இவ்வாறு பல உணவு பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தன.
இவ்வாறு எரிவாயுவின் விலைகள் குறைகின்ற போது உணவு பண்டங்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்ற நிலையில். இவ்வாறான செயற்பாடுகளை யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மாவட்ட பாவனையாளர் அதிகார சபை இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து மக்களின் நலன்களை சார்ந்து செயல்படுவதே மக்களின் கோரிக்கையாக காணப்படுகின்றது.



