இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமனம்

Acting Secretary to the President of Sri Lanka


இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன என்பரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க இருவரும் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சாந்தனி விஜேவர்தன பதில் செயலாளராக நியமிக்கப்ட்டுள்ளார்.



இன்று (20.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலாளர் நாடு திரும்பும் வரைக்கும் இது நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




காலி சவுத்லண்ட் பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான சாந்தனி விஜேவர்தன, ருகுணு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதோடு அவர் நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்துள்ளவர்.


அதிபர் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை இலங்கையின் வரலாற்றிலேயே இதுவே முதல் தடவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்