வீட்டுக்குள் புகுந்த திருடரின் வாளை பறித்து தாக்கிய வீட்டு உரிமையாளர் - வவுனியாவில் சம்பவம்


வவுனியாவில் நொச்சுமோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத குழுவொன்று வீட்டினுள் திருட முற்பட்டபோது வீட்டு உரிமையாளர் பதிலுக்கு திருடரின் வாளை பறித்து அவர்களை தாக்கியதில் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளர்

திருடர்கள் மீது பதில் தாக்குதல்

அடையாளம் தெரியாத குழுவொன்று குறித்த வீட்டில் புகுந்து நேற்று (27.07.2023) இரவு அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் மிக துணிச்சலாக திருடரின் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்

தம்பதியினர் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.



இந்நிலையில் வீட்டு உரிமையாளர் திருடர்கள் கொண்டுவந்த வாளை  பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய போது திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.



குறித்த  சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்