அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாய் மற்றும் 11 மாத குழந்தையின் சடலம் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அப்பகுதியில் உள்ள மக்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவரதும் பிரேத பரிசோதனை ஹொரணை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிலையில் நேற்று பிற்பகல் சடலங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
அதேவேளை மேலதிக பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருவரதும் கொலைக்கு காரணமானவர் என தெரிவிக்கப்படும் அவர்களது உறவினரான முன்னாள் இராணுவ வீரர் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
srilanka



