எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைக் குழுவொன்றை (உயர் பதவிக் குழு) அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் கடமைகள் பலவாக இருப்பதால் கட்சி விவகாரங்களில் அதிக நேரம் செலவழித்து இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க முடியாது என்பதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கட்சியின் சிரேஷ்டர்கள் முன்னிலையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பில் தேவையற்ற பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த தலைமைத்துவ சபையை நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
சம அதிகாரம் கொண்ட தலைமைத்துவ சபையை நியமிப்பதன் மூலம் உண்மையான தலைவர்கள் முன்வர முடியும் எனவும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் பின்வாங்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் ஆகஸ்ட் மாத நடுவாரத்தில் நடைபெறும் கட்சி மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.



