இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி

  

Tamil lk News

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 




மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) நிலையான விலையில் (2015) 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கு 2,883,559 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 




இது 2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.  இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது நேர் பெருமானத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 




2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், விவசாய நடவடிக்கைகள், தொழில்துறை மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 2.0 சதவீதம், 5.8 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்