வவுனியா - ஈரற்பெரியகுளம் பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (21.07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கினர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் இராணுவத்தினரின் துணையுடன் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தும்புத் தொழிற்சாலையின் இரு பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினரால் கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





