பிரதமர் நரேந்திர மோடியுடனான அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும்" என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்று நேற்று(20) கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது அவரை வரவேற்றதில் பெருமையடைகிறேன், பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு, நமது அண்டை நாடுகளின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்தியாவின் அண்டை நாடு முதல் மற்றும் சாகர் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதாகவும் நம்பிக்கை உள்ளது" என்று ஜெய்சங்கர் கூறயுள்ளார்.
"ரணில் விக்ரமசிங்கவின் வருகை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முகப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும்" என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாமல், சிறிலங்கா அதிபர் அவரது பதவியேற்றபின் பின்னர் இந்தியாவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவாக பயணம் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இந்த விஜயம் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



