உயிருடன் இருந்தவரை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது நேர்ந்த கதி!

vavuniya news


( vavuniya tamil news-tamillk ) மன்னார் -  இரணை இலுப்பக்குளம்  வைத்தியசாலையில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயல் காரணமாக, விபத்திற்குள்ளாகி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  வெளியிடப்பட்டுள்ளது. 


மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நபர் ஒருவரை, அவரது நண்பர்கள் இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு படுகாயமடைந்த நபருக்கு  வைத்திய சாலையில் எவ்வித முதலுதவியும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 




அதன் பிறகு படுகாயமடைந்த நபரை மேரா சிகிச்சைக்காக அவசரமாக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பியுள்ளனர். 


இவ்வாறு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் போது படுகாயமடைந்த நபர் உயிருடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 



இலுப்பக்குளம் வைத்தியசாலையில் இருந்து நோய் காவு வண்டியில் வவுனியா வைத்தியாசலைக்குச் சென்றுக் கொண்டிருக்கும் போது ஈச்சங்குளம் பகுதியில் வைத்து விபத்திற்குள்ளான நபர் உயிரிழந்துள்ளார்.



விபத்துக்குள்ளான நபரை சரியான நேரத்திற்கு இலுப்பக்குளம் வைத்தியசாலைக்குச் கொண்டு போய் இருந்த போதும் வைத்தியசாலையில் உள்ளவர்களின் அசமந்தப் போக்கினால் இந்த உயிர் பறிபோயுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 


இரணை இழுப்பக்குளம் வைத்தியசாலையில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டியும் பாவனைக்கு உகந்த வகையில் தயார் நிலையில் இல்லாததன் காரணமாக படுகாயமடைந்த நபரை உரிய நேரத்துக்குள்  வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்