( srilanka tamil news-tamillk ) கம்பஹா பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றை பராமரித்து வந்த 16 வயதுடைய மூன்று சிறுமிகள் மேற்படி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சிறுவர் இல்ல காப்பாளர்கள் கம்பஹா தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 3 சிறுமிகள் பற்றிய தகவல் சுற்றுவட்டார காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமிகளை கண்டுபிடிப்பதற்காக கம்பஹா தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka



