அம்பாறை - திகவாப்பிய பிரதான வீதியில் மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் பொலிஸாரின் உத்தரவை மீறி ஓடிய மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திகவாபியவில் இருந்து எரகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்களை மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் நிறுத்துமாறு பிரதேச போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் உத்தரவிட்ட போதும் அவர்கள் தொடர்ந்தும் ஓடியுள்ளனர்.
பின்னர் இரு தடவைகள் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிசார் அவர்களுக்கு மேலும் உத்தரவு பிறப்பித்த போதும் அவர்கள் ஓட முற்பட்ட போது பின் இருக்கையில் பயணித்தவரின் வலது காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைது செய்யப்பட்டு அம்பாறை அத்தியட்சகரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



