வவுனியாவில் புகையிறத கடவையில் லொறி மீது புகையிரதம் மோதியதில் - இருவர் படுகாயம்

vavuniya  train accident


வவுனியா  திருநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.07.2023) இடம்பெற்ற புகையிரத விபத்தில் லொறி சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் குறித்து தெரிய வருவது

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி புகையிரதம்,  வவுனியா - திருநாவற்குளம் 3ஆம் ஒழுங்கை பகுதியில் வைத்து, புகையிரத கடவையை கடக்க முயன்ற லொறி மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



விபத்தில் படுகாயம்

இந்த விபத்தில் லொறியில் பயணித்த சாரதியுடன் மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளனர். 

vavuniya  train accident


குறித்த விபத்தில் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, அவர்களை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 



இவ்விபத்தில் தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளனர் என வவுனியா பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்