கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என பிரபலமான தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கான காணிகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துப்புரவு பணிகள் இடம்பெறும் இடங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தொழிலதிபர் பாஸ்கரன் கங்கையா உள்ளிட்டோர் நேரில் சென்றுள்ளனர்.
இதன்போது தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா மேற்கொண்டவாறு கூறுகையில்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி ஏற்ற சில நாட்களிலேயே பெருமளவிலான மாற்றங்களை செய்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ்னத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் ஒரு இனத்தின் வலியை அந்த இனத்தை சேர்ந்தவரால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண மக்கள் ஆளுநரிடம் தமது தேவைகளை நேரடியாக சென்று தெரிவித்துக் கொள்ளலாம் என கூறினார்.



