ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது 5 அமைச்சுக்களின் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சர்கள்

srilanka tamil news


 இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (ஜூலை 20) பிற்பகல் இந்தியா செல்லவிருந்தார்.



ஜனாதிபதி நாட்டிற்கு வராத காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை கண்காணிப்பதற்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



மேலும், இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்