( vavuniya news-tamillk ) தமிழ் பேராசிரியரும், முத்தமிழ் வித்தகர் என புகழ்பெற்ற சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களின் 76 வது நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் நகர மத்தியில் அமைந்துள்ள அவரின் சிலையடியில் வவுனியா மாநகரசபை செய்யப்பட ஏற்பாட்டில் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் மாலை அணிவித்தார் மற்றும் நகரசபையின் செயலாளர் உட்பட்ட பலரும் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.




