ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் இவ்வருட இறுதிக்குள் 290 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், இணையத்தளத்தின் ஊடாக உலக தேயிலை சந்தையுடனான பரிவர்த்தனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை இழந்த ஈரானிய தேயிலை சந்தையை மீளப்பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
srilanka



