வவுனியா, தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்பில் பொலிசார் மற்றும் சிஐடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தே நபராக கருத்தப்படும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02.08.2023) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபரை இன்று (03.08.2023 வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய சிஐடியினர் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர். அதற்கு அமைய 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதி வழங்கியுள்ளது.
Tags:
Vavuniya-news



