பழமையான இந்து கோவில் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி! பலர் மாயம்!

 

tamillk news

இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் பழமையான இந்து கோவில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் 20-25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.


கடும் மழையின் போது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பிரபலமான சுற்றுலா நகரமான சிம்லாவில் உள்ள இந்து கோவில் ஒன்றே நிலச்சரிவு காரணமாக இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்