பேருந்து கவிழ்ந்து விபத்து-கொழும்பில் பம்பலப்பிட்டியில் சம்பவம்

 பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லஸ் சந்திக்கு அருகில் இன்று (14) அதிகாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


tamillk news


கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தும்முல்ல திசையில் இருந்த வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தின் போது பேருந்தில் சுமார் 15 பயணிகள் இருந்துள்ளதுடன் அவர்களில் இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சமிக்ஞை விளக்கினை மீறி பேருந்து பயணித்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்