கனடா காட்டுதீ- பிரிட்டிஸ் கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம் -15000 குடும்பங்களை வெளியேற உத்தரவு

tamillk news


கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் பல வீடுகளை காட்டுதீ விழுங்கியுள்ள நிலையில் சுமார் 15000 குடும்பங்களை அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 36000 பேர் கொண்டமேற்குகெலோவ்னா நகரில்  பல கட்டிடங்கள் தீப்பிடித்துள்ளன 2400 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முழுமாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது-மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்;ட காட்டுதீக்கள் காணப்படுகின்றன.

இதேவேளையெலோநைவ்லிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட காலஎல்லை முடிவடைந்துள்ள நிலையில் அந்த நகரின் அனைத்து மக்களும் கார்கள் அல்லது விமானங்கள் மூலம் வெளியேறியுள்ளனர்.

tamillk news


நகரின் 20000 பேரில் 19000 பேர் வெளியேறிவிட்டனர் என எச்சரித்துள்ள அமைச்சர் ஒருவர் எஞ்சியிருப்பவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நெடுஞ்சாலைகளும் விமானநிலையங்களும் பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்