நல்லூர் - மாம்பழ திருவிழாவில் பக்தர்களை கவர்ந்த சிறுவன் முருகன்!

Tamil lk News


 Jaffna news

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று (19 )காலை மாம்பழ திருவிழாவிற்கு முருகன் வேடமணித்து தண்டபாணி தெய்வமாக  வந்த சிறுவன் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் வருடாந்த பெரும் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது



 நல்லூர் கந்தனின் அருளை பெற நாட்டில் பல பிரதேசங்களில் இருந்தும் மட்டுமன்றி பெரும் பெயர் தேசங்களில் இருந்தும் நல்லூரானை காண பக்தர்கள் யாழ்ப்பாணத்தில் குவிந்துள்ளனர்.



 அதுமட்டுமன்றி வெளிநாட்டவர்கள் பலரும் நாலூராஇ தரிசிக்க புறப்பட்டு வந்துள்ளனர்.



 இந்நிலையில் இறு காலை இடம்பெற்ற தண்டாயுதபாணி திருவிழாவிற்கு வந்த சிறுவன் ஒருவர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.


இன்று காலை மாம்பழ திருவிழா இடம்பெற்ற நிலையில் மாலை நல்லூர் கந்த சுவாமியார்  ஒரு முகமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கவுள்ளார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்