இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் - மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tamillk news


இன்று காலை (14) குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.

இராணுவத்தினரின் உதவி தேவை

பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை எனவும், குறித்த பகுதியில் இடம்பெறும் மண் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் உதவி தேவை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.



யாழ். மாவட்ட இராணுவ தளபதி அவர்களே கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 ஆவது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.



தற்போது இருக்கின்ற இராணுவ முகாம் அகற்றப்பட்டலும் இதே பகுதியில் இருக்கும் அரச காணி ஒன்றி இராணுவ முகாமை அமைத்து இந்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரேத செயல்பாடுகளை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்