அனுராதபுரம் - பதனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகெம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய பிரேதேஹா பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர்.
மௌலானா சிந்து அகமது (ஓட்டுனர்) (46), ஜைனு அஹப்துல் சாப்பா (46), சைது அகமது மௌலானா (43), அப்துல் ரஹ்மான் முகமது ரசீம் (36) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது லொறியின் பின்பகுதியில் போதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.




