பல நாடுகளைப் போலவே ஈரானும் தற்போது வழக்கத்திற்கு மாறான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் வெளியில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்று ஈரானிய சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி இன்றும் (2) நாளையும் (3) விசேட விடுமுறை தினங்களாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானிய வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தினசரி வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி பஹதுரி ஜரோமி கூறுகையில், கடும் வெப்பம் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளும் விழிப்புடன் உள்ளன.
Tags:
world-news



