ஆசிரியர்களின் இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத - கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்

 
tamillk news

ஆசிரியர்களின் இடமாற்ற உத்தரவு தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.


இதன்படி, இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு ஆசிரியர்களுக்கு பல முறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த உத்தரவுகளை பொருட்படுத்தாமல் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் முன்பு இருந்த பாடசாலைகளிலேயே சேவை புரிவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.



சேவையின் தேவையின் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் உள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்