வவுனியா - ஈரற்பெரியகுளம் பகுதியில் விபத்தில் ஒருவர் பலி!

 

tamillk news

வவுனியா - ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும். அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

tamillk news


இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, டிப்பர் வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.



இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

tamillk news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்