மனைவியை கடத்திய கணவன்..! யாழில் பரபரப்புச் சம்பவம் Tamillk news

tamillk news-jaffna news


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் கணவனால் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் இன்று காலை  இடம் பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்த்து வருவதாகவும் இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.



இதுதொடர்பில் பருத்தித்துறை பொலீசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அவர்களது தாயார் வீடுகளில் வசித்துவந்துள்ளனர்.


இன்றைய தினம் திடீரென கணவர் அவரது சகாக்கள் சகிதம்  வாள்  கொண்டு சென்று  வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தனது மனைவியை அவரது விருப்பமின்றி கார் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 Jaffna tamil news


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்