12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் Rasi palan - Tamillk News

12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் - 10-09-2023

tamillk news
12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் Rasi palan - Tamillk News


 மேஷம்: அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த - பந்தங்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு உண்டு.


ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.



மிதுனம்: தாயாருடன் கருத்து மோதல் வரும். பணவரவு திருப்தி தரும் என்றாலும் அநாவசியச் செலவுகள் வந்து போகும். மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக பயன்படுத்தவும். பால்ய நண்பரை சந்திப்பீர்.

கடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகைகள் தாமதமாக வரும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளை பிறரிடம் கூற வேண்டாம்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இன்று முடிவடையும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிட்டமிடுவீர்கள்.




கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து காட்டுவீர் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.


துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய யாத்திரை, சுப காரியங்களுக்கெல்லாம் தலைமை தாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்க்கவும்.




விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக் கூடும். தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.


தனுசு: பழுதாகியிருந்த வாகனம் சரியாகும். கிரகப்பிரவேசம், சீமந்தம் என்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.


மகரம்: புதிய வீடு கட்ட மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை உண்டு.


கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்கள் மூலமாக சில உதவிகள் கிட்டும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.


மீனம்: கடந்த காலத்தில் நடந்த நல்ல சம்பவங்களை நினைத்து மகிழ்வீர். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து விடவும்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்