நடிகர் விஜய் ஆண்டனி மகள் மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்! tamillk news

 

tamillk news-cinema tamil news
நடிகர் விஜய் ஆண்டனி மகள் மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்! tamillk news

விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா (16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது அறையில் வழக்கம் போல் உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி அவரது மகளின் அறைக்கு சென்றபோது ஃபேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதனையடுத்து வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் வீட்டிலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. தேனாம்பேட்டை போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்ததும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்