![]() |
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு |
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அண்மைக்காலமாக தென்பகுதியில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Srilanka tamil news
Tags:
srilanka