இந்தியாவிலிருந்து இறக்குமதி முட்டை விநியோகத்தில் மோசடி! tamillk news

 

srilanka tamil news -tamillk news

அரசாங்கம் தரம் குறைந்த முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இந்திய முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய தரகு மோசடி நடைபெறுவதாகவும் , அதனை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா அகற்றும் பாவனைக்கு உதவாத முட்டைகள் கொண்டு வரப்படுவதாகவும், குறைந்த விலைக்கு முட்டைகள் கிடைத்தாலும் சந்தைக்கு வரும்போது விலை பெருமளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





தனது குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிக்கப்பட்டால் பொரளை சந்தியில் நிற்கத் தயார் எனவும் தனது குற்றச்சாட்டுகள் சரியென நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்