மக்கள் மீது மேலும் சுமை - வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கடும் நிலைப்பாடு - tamillk news

 

srilanka tamil news - tamillk news

srilanka tamil news - நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில், நாடு திரும்பிய போது இதனை தெரிவித்துள்ளார்.


நாடு திரும்பிய அன்றையதினம் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.


அப்போதும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல தடவைகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.


சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரியை மேலும் அதிகரிக்குமாறு கூறுகின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதம் அரசின் வருமானம் போதவில்லை என்பதாகும் என அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.





 எங்களால் இனியும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த முடியாது. நாங்கள் அதிகபட்சமாக சுமையை ஏற்றியுள்ளோம். அரசின் வருவாய் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களிடம் நாங்கள் அந்த விடயங்களை தெளிவுபடுத்துவோம்.


என்ன செய்தாலும் இனி வரியை உயர்த்த முடியாது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்