வவுனியாவில் கோரவிபத்து...! பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு...! Tamillk News- vavuniya News

tamilk news-vavuniya tamil news
வவுனியாவில் கோரவிபத்து...! பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு...! 


Vavuniya News -  வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி விளக்கு வைத்தகுளத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்