ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு Tamillk News

 

tamillk news

Srilanka Tamil News  - ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.



பிரதமர் பதவி வேண்டாம் என்று மற்றவர்கள் ஓடிக்கொண்டிருந்த போது தாம் நாட்டை பொறுப்பேற்று முன்னோக்கி கொண்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் ஊழியர் சேமலாப நிதிக்கு நூற்றுக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது தாம் தீர்மானித்தது அல்ல, மொட்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்