![]() |
ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் நிறைவு! Tamillk News |
Srilanka tamil news - தமது வேலைநிறுத்தத்தை கைவிட லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைத்தமையினால் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது வேலை நிறுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், நாளை பிற்பகல் ஆகும் பொழுது ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Tags:
srilanka