மட்டக்களப்பு உறுகாமத்தில் 300 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

  மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த பலத்த மழை பெய்து வருகின்றது இந்நிலையில மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, பழுகாமம், போரதீவு, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, உள்ளிட் பல பகுதிகளிலும் அமைந்துள்ள சிறிய கிராமியக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிவதோடு பார்க்கும் இடங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி தருகின்றது.


இந்நிலையில் மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளதுடன், வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள.

Tamil lk News


அந்த வகையில் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிவரையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 27.5 அடி, தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 12 அடி, உன்னிச்சைக்குளம் 27.4 அடி, உறுகாமம் குளம் 18.6 அடி, அக்குளத்தில் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வாகனேரிக்குளம் 16.3 அடி,  கட்டுமுறிவு 12 அடி, கித்துள்வெவ 5.7 அடி, வெலிக்காக்கண்டிய 16.6 அடி, வடகுனைக்குளம் 9 அடி, புiணாணை அணைக்கட்டு 8.9 அடி மாவடிஓடை அணைக்கட்டு 14 அடி நீர்மட்டமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.




இந்நிலையில் வியாழக்கிழைமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் நவகிரிப்ப பகுதியில் 127 மில்லி மீற்றர்,  தும்பங்கேணிப் பகுதியில் 67 மில்லி மீற்றர், உன்னிச்சைப் பகுதியில் 160.3 மில்லி மீற்றர், உறுகாமம் பகுதியில் 300 மில்லி மீற்றர், வாகனேரி பகுதியில் 139.5 மில்லி மீற்றர், கட்டுமுறிவு பகுதியில் 96 மில்லி மீற்றர், மட்டக்களப்பு நகரில் 169.3 கல்முனை பகுதியில் 66.1 மில்லி மீற்றர், மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்