Srilanka Tamil News - கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஜா-அல புனித விக்ஷோபா மாதா தேவாலய மைதானத்தில் உள்ள பாரிய கொஹொம்பா மரம் முறிந்து வீழ்ந்ததில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் போது மரம் விழுந்தது. மரம் விழுந்ததில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அப்பகுதி மக்கள் மற்றும் ஜாஎல பொலிசார் இணைந்து மரத்தை அகற்றினர்.



